வைத்தியசாலைகளுக்கு வருகை தருகின்ற நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலை கட்டண அதிகரிப்பு மற்றும் தனியார் மருந்தகங்களில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு போன்ற காரணங்களால் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் மற்றும் கிளினிக்குகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
மருந்துகளுக்கு காணப்படும் தட்டுப்பாடுகள் மற்றும் வெளியில் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய முடியாத அளவுக்கு அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகள் போன்ற காரணங்களால் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்












Discussion about this post