உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி, மு.ப. 7.00 மணி முதல் பி.ப. 4.00 மணி இடம்பெறுமென அறிவித்து, ஒவ்வொரு மாவட்டத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களாலும் தனித்தனி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, நாட்டின் 25 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்தல் இடம்பெறும் மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகளின் பெயர்களை குறிப்பிட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு சில சபைகள் தொடர்பில் இடம்பெற்று வரும் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவற்றின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




Discussion about this post