நுவரெலியா நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதியை 25000 ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நுவரெலியா நீதவான் நாலக சஞ்சிவ எதிரிசிங்க உத்தரவிட்டுள்ளார்.
ஹொரண குடுஉடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான இகுரகே ஞானரத்ன (என்பவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபரான சாரதி, கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து மாணவர்களை நுவரெலியா பகுதிக்கு சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் கொழும்பு நோக்கி பேருந்தை செலுத்திக்கொண்டிருந்த போது வேன் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற விபத்தில் வேனின் சாரதி உட்பட ஆறு பேர் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன் பேருந்தில் இருந்த 41 பாடசாலை மாணவர்கள் உட்பட 53 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Discussion about this post