இன்று கொழும்பை சுற்றியுள்ள பல வீதிகள் மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று இடம்பெறவுள்ள கலாசார இசை நிகழ்ச்சி முடியும் வரை குறித்த வீதிகள் மூடப்படவுள்ளன.
நிதஹஸ் மாவத்தை, நிதஹஸ் சுற்றுவட்டத்தில் இருந்து சுதந்திர சதுக்கத்தை நோக்கிய வீதி.
பதனம் மாவத்தை, ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தை சந்தியில் இருந்து பதனம் மாவத்தை நோக்கிய நுழைவு.
பிரேமகீர்த்தி டி அல்விஸ் மாவத்தை, தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திலிருந்து சுதந்திர சதுக்கத்தை நோக்கி நுழைவு ஆகிய பகுதிகள் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.






Discussion about this post