உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழு பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க தவறியுள்ள நிலையில் அதுதொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்கும் யோசனை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் மேற்படி செயற்பாடு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் சிறப்புரிமையும் மீறப்பட்டுள்ளதுடன் அதுதொடர்பில் விடயங்களை விசாரணைசெய்யவேண்டுமென மேற்படி யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி பாராளுமன்றத்தில் 14 எம்.பிக்களின் கையொப்பத்துடன் கடிதமொன்றையும் சபாநாயகருக்கு எழுத்துமூலம் வழங்கப்பட்டுள்ளது. அந்த யோசனை பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.






Discussion about this post