இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்று பேக்கரி உரிமையாளர்களுக்கு தலா 30 ரூபாவுக்கு வழங்கப்பட்டாலும் பாண் பணிஸ் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தவிர இருபது இலட்சம் முட்டைகள் பேக்கரி மற்றும் கேக் உற்பத்திக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே போதுமானது என சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின்சார கட்டணம், எரிவாயு போன்றவற்றின் விலையேற்றம் காரணமாக பேக்கரி தொழில்துறை கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது.
எனவே பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








Discussion about this post