அரசாங்கத்தின் வரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை மீள பெறுமாறு வலியுறுத்தியும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று திங்கட்கிழமை நான்கு மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டன.
இச்சங்கம் நேற்று முதல் நான்கு மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், மேல், தென், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலுள்ள சுகாதார நிலையங்கள், வைத்தியசாலைகள் உட்பட சகல மருத்துவ சேவை நிலையங்களின் வைத்தியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று திங்கட்கிழமை (13) காலை 08 மணிமுதல் ஆரம்பித்த இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக டிக்கோயா ஆதார வைத்தியசாலை மற்றும் பொகவந்தலாவ, மஸ்கெலியா, நுவரெலியா ஆகிய வைத்தியசாலைகளும் வெறிச்சோடியிருந்தன.
வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை அறிந்த பெருந்தொகையான நோயாளர்கள், முன்கூட்டியே வைத்தியசாலைகளுக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொண்டனர். அதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பை அறியாத நோயாளர்கள் சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதையும் காணக்கூடியதாக இருந்தது. வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை மட்டுமே வழங்கப்படும் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.




Discussion about this post