சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற இறக்குமதி பொருட்களின் விலைகள் மேலும் குறையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி காரணமாக கடந்த சில தினங்களில் ஏற்கனவே பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இறக்குமதி செலவு குறைந்துள்ளதால், வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் நுகர்வோருக்கு இன்னும் குறைந்த விலையில் வழங்கப்படும் என்றார் அமைச்சர்.
பெருமளவிலான நுகர்வுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால், ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ளமை பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் என அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்தார்.
எனவே பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் குறைந்த விலையில் நுகர்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.






Discussion about this post