தொழிற்சங்கங்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடும் வகையில், வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை (31) விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளது.
இலங்கையின் வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் நிலுவையில் உள்ள பின்னணியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வரிக் கொள்கை தொடர்பில் கலந்துரையாடுமாறு கோரி ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் செயலாளருக்கு வியாழக்கிழமை (30) மற்றுமொரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அவர்களின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டால் நாங்கள் அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிடின் வேலை நிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது.




Discussion about this post