மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின்
இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 220 ரூபாவாக இருந்த ஒரு கிலோ வெள்ளைச் சீனி 200 ரூபாவாகவும், 340 ரூபாவாக காணப்பட்ட ஒரு கிலோ பருப்பு விலை 310 ரூபாவாகவும் குறைந்துள்ளது.




Discussion about this post