நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜேர்மன் நட்புறவு பாடசாலையினைச் சுற்றியுள்ள பிரதேசம் நேற்று இரவு நிந்தவூர் பொலிஸ் நிலைய விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிசாரினால் சுற்றி வளைக்கப்பட்ட போது, போதைப்பொருள் பாவித்த 09 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் தலைமையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றிருந்ததுடன், போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகளையும், ஏனையவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளும் தற்போது முடக்கி விடப்பட்டுள்ளதாக நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.




Discussion about this post