காசநோய் இரத்தினபுரியில் அதிகமாகப் பரவும் அபாயம் காணப்படுவதாக போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காசநோய் தடுப்பு தொடர்பான பொது விழிப்புணர்வு தொடர்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த வருடம் (2022) 331 காசநோயாளிகள் கண்டறியப்பட்டனர்.
அதில் 30 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 10 சதவீதமானோர் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டமை கவலைக்குரிய விடயம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் வருடாந்தம் சுமார் 14,000 காசநோயாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டாலும், 10 ஆயிரம் பேர் மட்டுமே கண்டறியப்படுகின்றனர்.
சுமார் 4 ஆயிர்ம் நோயாளர்கள் பதிவாகாமல் இருப்பதற்கு அறியாமையே முக்கிய காரணம் என வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.




Discussion about this post