யாழ். மாவிலி துறைமுகத்துக்கு அண்மையிலுள்ள வீடொன்றிலிருந்து 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.
3 பெண்கள், 2 ஆண்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்தவர்களும் உள்ளதாக தெரிய வருகிறது.
அத்தோடு சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டிலிருந்து காயத்துடன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நெடுந்தீவு பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டுள்ளனர்.





Discussion about this post