கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி.எஸ்.எம். சுபோதானி உடன் அமுலுக்கு வரும் வகையில் உயர்கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சரின் தலையீட்டினால் மேலதிக செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஆசிரியர் இடமாற்றங்களை சீரமைக்கும் நோக்கில் கடந்த மாதம் ஆசிரியர் இடமாற்ற சபையை ஜனாதிபதி கலைத்த போதும், ஆசிரியர் இடமாற்றச் சபை கலைக்கப்பட்ட போதிலும், ஆசிரியர் இடமாற்றத் திட்டம் அப்படியே தொடர்வதாக அதிபர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளது.




Discussion about this post