ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தேசிய பெறுகை ஆணைக்குழு மற்றும் நிதி ஆணைக்குழுவிற்கான
உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பெறுகை ஆணைக்குழுவின் தலைவராக டபிள்யூ. சுதர்மா கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன்,
ஏனைய உறுப்பினர்களாக வர்ணகுலசூரிய ஐவன் திசேரா, டி. பியசிறி தரணகம, சுமந்திரன் சின்னகந்து மற்றும்
ஏ.ஜி. புபுது அசங்க குணவங்ச ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிதி ஆணைக்குழுவின் தலைவராக சுமித் அபேசிங்கவும், துவான் நலின் ஓசேன் மற்றும் மாயன் வாமதேவன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.




Discussion about this post