Tuesday, May 19, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

மாணவனின் தொலைபேசியினை அதிபர் பறித்தமையினால் மாணவன் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயற்சி.

by editor
May 7, 2023
in இலங்கை
0 0
A A
0
மாணவனின் தொலைபேசியினை அதிபர் பறித்தமையினால் மாணவன் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயற்சி.
Share on FacebookShare on Twitter

பாடசாலை மாணவனின் தொலைபேசியினை அதிபர் பறித்தமையினால் மாணவன் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியா பூவரசங்குளத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டிக்கான இல்ல அலங்கார செயற்பாட்டினை குறித்த மாணவன் சக மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்டதாகவும், அதற்கான ஒவியம் வரைவதற்காக அன்றையதினம் இரவு பாடசாலைக்கு தொலைபேசியினை கொண்டு சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு தொலைபேசியினை பாடசாலையினுள் குறித்த மாணவன் பாவிப்பதை கண்ட அதிபர் தொலைபேசியினை பறித்ததுடன் மாணவனின் தந்தையை தன்னை சந்திக்க வேண்டும் என கூறியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

அதன் பின்னர் மாணவனின் தாய் அதிபரிடம் தொலைபேசியில் விடயத்தை கேட்டதுடன் தொலைபேசியை வழங்குமாறும் கோரியுள்ளார். எனினும் அதிபர் தொலைபேசியினை வழங்காததுடன், தந்தையை கட்டாயம் தன்னை சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து தொலைபேசியின் ஊடாக மாணவனின் தந்தை அதிபரை தொடர்பு கொண்டு கதைத்துள்ளார்.

இதன்பின்னர், மாணவனின் தந்தை தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக பூவரசங்குளம் பொலிஸில் அதிபர் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.

இவ் முறைப்பாட்டினை அடுத்து இரு பகுதியினரையும் பொலிஸார் அழைத்து பேசி விசாரணை நடத்தியதாக மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையிலேயே அவமானத்தை தாங்க முடியாமல் குறித்த மாணவன் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும் மாணவனின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர். குறித்த மாணவனின் சக வகுப்பு மாணவ, மாணவிகள் வகுப்பறைக்கு செல்லாமல் பாடசாலைக்கு முன்பாக கூடியிருந்தனர்.

இதனை அடுத்து வலய கல்வி பணிமனை அதிகாரிகள் பாடசாலையில் மாணவனின் உறவினர்களுடன் கலந்துரையாடியதுடன் மாணவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக மாணவனின் பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் வவுனியா தெற்கு வலய கல்வி பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் 12 ஆம் திகதி குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்காக அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியேர் மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைக்கப்படவுள்ளனர்.

அத்துடன் இச்சம்பவம் தொடர்பான வலயக் கல்விப் பணிப்பாளரும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்
இலங்கை

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

May 16, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!
இலங்கை

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..
இலங்கை

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

May 16, 2026
ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

May 11, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version