தனது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக இனந்தெரியாத நபர் ஒருவர் தன்னைக் கீழே வீழ்த்தி தாக்கியதாக காலி மஹிந்த கல்லூரியின் அதிபர் காலி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதிபரின் மனைவிக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று நேற்று வெள்ளிக்கிழமை (12) இரவு 11.30 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி காரில் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு திரும்பியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உத்தியோகபூர்வ இல்லத்தின் வாசல் கதவை திறப்பதற்காக காரில் இருந்து கீழே இறங்கிய போது, மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் காருக்குப் பின்னால் வந்த நபர் ஒருவர் தன்னைக் கீழே வீழ்த்தி தாக்கிவிட்டு தப்பிச் சென்றார் என அதிபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.




Discussion about this post