டெங்கு நோய் வெகுவாக அதிகரித்து வருவதாகவும் நேற்று வரையான காலப்பகுதியில் 22 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் மாத்திரம் இதுவரை டெங்கு நோயினால் ஏழு பேர் மரணமடைந்துள்ளதாகவும் ஒரே தடவையில் அதிகளவு நோயாளர்கள் உருவாகினால் கட்டுப்படுத்துவது பெரும் சிரமமாக அமையும் என்றும் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
டெங்கு நோயினால் கொழும்பில் இருவரும் கம்பஹாவில் நால்வரும் களுத்துறையில் ஒருவருமாக மேல் மாகாணத்தில் இதுவரை 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். அந்த வகையில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மரணமடைவோரின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கலாம். நாட்டில் தற்போது கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, குருநாகல், கேகாலை, காலி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு நோய் குறிப்பிடத்தக்களவு அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Discussion about this post