நாட்டில் 06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை, கேகாலை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் வசிப்பவர்கள் மலைகள், சரிவுகள் மற்றும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது
Discussion about this post