தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை விற்பனை தரவுகள் நேற்று தெரிவித்தன. நேற்று (31) காலை கொழும்பு செட்டியார் தெருவில் தங்க விற்பனை நிலவரப்படி ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை ரூ. 1,49,700 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த வாரம் புதன்கிழமை ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 1,56,000 ரூபாவாக இருந்தது.
அதேபோல் , ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை இன்று 1,63,300 ரூபாவாக ஆக குறைந்துள்ளதாகவும் கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




Discussion about this post