இரவு ரோந்து நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட நோர்வூட் பொலிஸ் ஜீப் ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள குன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பகுதியில் உள்ள அனுமதியற்ற மாணிக்கக்கல் குவாரியை சோதனையிடுவதற்காக குறித்த ஜீப் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.




Discussion about this post