கட்சிகளின் உள்ளக ஜனநாயகம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தேர்தல் முறைமை தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, இதில் கலந்து கொண்ட தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் நடத்துவதற்கு தயார் என தெரிவித்தார்.
வளர்ச்சியடையாத நாட்டில் வாக்கெடுப்பை நடத்துவதும் அபிவிருத்தியே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Discussion about this post