பாஸ்வோர்ட் ஷேரிங்கை தடுக்க நெட்ஃபிலிக்ஸ் எடுத்த முயற்சிகள் கைகொடுத்த நிலையில், இந்தியாவிலும் விரைவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் பாஸ்வோர்ட் ஷேரிங்கை முடிவுக்கு கொண்டு வர Netflix எடுத்த முயற்சியின் பலனாக லட்சக்கணக்கில் புதிய சப்ஸ்கிரைப்ர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இந்தியாவிலும் விரைவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் டிவி சேனல்களுக்கு சவால் விடும் வகையில் அமேசான் பிரைம், நெட்ஃபிலிக்ஸ், சோனி லைவ் ஜி, சன் என்எக்ஸ்டி போன்ற OTT தளங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த OTT தளங்களை அணுக ஒரு குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தி அவற்றில் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும். ஆனால் பலர் தாங்கள் சப்ஸ்கிரைப் செய்த பாஸ்வோர்டை தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்கின்றனர்.
இதனால் பலர் சப்ஸ்கிரைப் செய்யாமலேயே OTT தளங்களை கண்டு களிக்கின்றனர். இது அந்த நிறுவனங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் ‘பாஸ்வேர்ட் ஷேரிங்’ -ஐ நிறுத்துவதற்கான ஒரு சில முயற்சிகளை எடுத்தது. அதற்கு பலனளிக்கும் விதமாக நிறுவனத்திற்கு அதிக அளவில் புதிய சப்ஸ்கிரைபர்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் பாஸ்வோர்ட் ஷேரிங் செய்வதை முற்றிலுமாக தடுத்த பிறகு Netflix-ல் புதிதாக 2 லட்சத்து 80 ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் கிடைத்திருப்பதாக ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது. இனியும் தங்களது பாஸ்வேர்டுகளை நண்பர்களுக்கோ, பிறருக்கோ பகிர்ந்துக் கொள்ள முடியாது என்று Netflix தெரிவித்த நான்கு நாட்களுக்குள் ஒவ்வொரு நாளும் 70 ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் வந்த வண்ணம் இருப்பதாக Netflix நிறுவனம் கூறுகிறது.

ஆகவே மொத்தத்தில் நான்கு நாட்களுக்கு இவர்களுக்கு 2,80,000 புதிய சப்ஸ்க்ரைபர்கள் கிடைத்துள்ளனர். அதிலும் ஒரு நாளில் மட்டுமே 1 லட்சம் புதிய அமெரிக்க சப்ஸ்கிரைபர்கள் நெட்ஃபிலிக்ஸில் லாகின் செய்துள்ளனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் தங்களது சப்ஸ்கிரைப்ர்களை அதிகரிக்க நெட்ஃபிலிக்ஸ் ஆட் சப்போர்ட்டட் சப்ஸ்கிரைப் முறை மற்றும் குறைந்த விலை பிளான்களை அறிமுகப்படுத்தியது. Netflix முதலில் லேட்டின் அமெரிக்கா மற்றும் பிற பகுதியில் பாஸ்வோர்ட் ஷேரிங்கை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. பின்னர் இதே திட்டம் ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் தற்போது அமெரிக்காவிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.







Discussion about this post