முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையை குறைக்க இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதல்ல, கால்நடை வளர்ப்புத் திட்டத்தை வெளிநாட்டு சந்தைக்கு வழங்கும் திட்டமாக மாற்றுவதே தமது நோக்கம் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முட்டையின் விலை 50 ரூபாவைத் தாண்டியுள்ளதுடன், ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையும் 1,600 ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் நேற்றைய ஊடக சந்திப்பில் கேள்விகள் எழுந்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.






Discussion about this post