விலை குறைப்பை எதிர்பார்த்து விநியோகத்தர்கள் கொள்வனவு கோரிக்கையை வழங்காததால், எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஆயினும் இவ்வாரம் விலை திருத்தத்தை மேற்கொள்ளப் போவதில்லையென தெரிவித்துள்ள அவர், தேசிய எரிபொருள் அட்டைக்கு அமைய பூர்த்தி செய்யக் கூடிய அளவிலான போதிய எரிபொருள் கையிருப்பு, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் LIOC யிடம் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தங்களுக்கு அவசியமான எரிபொருட்களைள கொள்வனவு செய்யுமாறு விநியோகத்தர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Discussion about this post