ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஒகஸ்ட் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை இடம்பெறும் என ஆசிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெற்றால் அதில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஆசிய கிண்ண போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அருண் துமால் கூறுகையில்,
ஆசிய கிண்ணத்திற்கான அட்டவணை உறுதி செய்யப்பட்டது.
பாகிஸ்தானில் லீக் போட்டியில் 4 போட்டிகள் இருக்கும். இலங்கையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி உட்பட 9 போட்டிகள் இருக்கும்.
ஒருவேளை இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதினால் மூன்றாவது ஆட்டம் இருக்கும் என தெரிவித்தார்.
2010 ஆம் ஆண்டு போலவே இலங்கையின் தம்புல்லா மைதானத்தில் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதும்.
பாகிஸ்தானில், நேபாளம்-பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்-பங்கதேஷ் பங்கதேஷ்-இலங்கை மற்றும் இலங்கை-ஆப்கானிஸ்தான் ஆகிய 4 லீக் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும்.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதி தலைவர் ஜகா அஷ்ரப்பை சந்தித்து பேசிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அருண் துமால் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசிய கிண்ணத்தில் இரண்டு முறை நேருக்கு நேர் மோதுவது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




Discussion about this post