மொனராகலை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதன்படி 2.6 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post