Sunday, June 21, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இந்தியா

Indian 2: ஆண்டவரே கொல மாஸ்..தரமான சம்பவம்: இந்தியன் தாத்தா இஸ் பேக்.!

by editor
August 16, 2023
in இந்தியா, சினிமா
0 0
A A
0
Indian 2: ஆண்டவரே கொல மாஸ்..தரமான சம்பவம்: இந்தியன் தாத்தா இஸ் பேக்.!
Share on FacebookShare on Twitter

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

‘விக்ரம்’ படத்திற்கு பிறகு கமல் நடிப்பில் ‘இந்தியன் 2’ படம் உருவாகியுள்ளது. ‘விக்ரம்’ படத்தால் படைத்த இமாலய சாதனையை கமலின் அடுத்த படம் முறியடிக்குமா என்பது தான் கோலிவுட் சினிமாவின் தற்போதைய உச்சக்கட்ட எதிர்பார்ப்பாக உள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மாஸான டைரக்ஷனில் இந்தப்படம் உருவாகி வருகிறது.

கமலின் அதி தீவிரமான ரசிகராக சினிமாவில் நுழைந்து அவரை வைத்தே கோலிவுட் சினிமாவே வியக்கும் வெற்றியை படைத்தார் லோகேஷ் கனகராஜ். படங்களின் தரங்களை எல்லாம் தாண்டி கமர்ஷியல் ரீதியான வெற்றி தேவைப்படும் இந்தக்காலத்தில் ‘விக்ரம்’ படத்தின் வெற்றி கமலுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.

இதனால் நடிப்பு, தயாரிப்பு என படு பிசியாக இயங்கி வருகிறார் கமல். இதனிடையில் அரசியல், பிக்பாஸ் வேற. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் தான் ‘இந்தியன் 2’ படத்திலும் நடித்துள்ளார் கமல். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ‘விக்ரம்’ படத்திற்கு முன்பாகவே இந்தப்படத்தை துவங்கினார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, கொரோனா ஆகிய காரணங்களால் படப்பிடிப்பு தடைப்பட்டது.

இதனையடுத்து கமலும், ஷங்கரும் தங்களின் அடுத்தடுத்த படங்களில் பிசியானர்கள். இதனால் ‘இந்தியன் 2’ படத்திற்காக பணம் போட்ட லைகா நிறுவனம் நீதிமன்றத்தின் உதவியை நாடியது. அதன்பின்னர் பலக்கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. தமிழில் இந்தப்படம், தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’ படங்கள் என மாறி மாறி இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் மும்முரமாக நடத்தி வந்தார் இயக்குனர் ஷங்கர்.

இந்நிலையில் நேற்றைய தினம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ‘இந்தியன் 2’ படத்தின் மிரட்டலான போஸ்டர் வெளியாகியுள்ளது. ப்ராஸ்தெடிக் மேக்கப் எல்லாம் போட்டு 90 வயது தாத்தாவாக கமல் இருக்கும் புதிய போஸ்டர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியன் தாத்தாவாக கமல் அரிதாரம் பூசியுள்ள நிலையில் கொல மாஸா இருக்கீங்க.. அந்த கண்ணு போதும் ஆண்டவரே என கூறி வருகின்றனர் ரசிகர்கள்.

‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் கமலுடன் இணைந்து நடித்துள்ளனர். அத்துடன் மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் இந்தப்படத்தில் நடித்துள்ளார்கள். ‘விக்ரம்’ படத்தினை தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்திற்கும் கமலுக்காக அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

தலைமுறை கடந்த காந்தக் குரல்: எஸ்பிபி பிறந்தநாளில் சில அரிய நினைவுகள்!
இந்தியா

தலைமுறை கடந்த காந்தக் குரல்: எஸ்பிபி பிறந்தநாளில் சில அரிய நினைவுகள்!

June 5, 2026
ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…
இந்தியா

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

May 11, 2026
குடும்பத்துக்கு விஜய் கடன்
இந்தியா

குடும்பத்துக்கு விஜய் கடன்

March 31, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022
ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

October 4, 2023

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA

சில மருந்துகளின் விலைகள் அதிகரிப்பு?

June 5, 2026
கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

புத்தளத்தில் கொடூர விபத்து: தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு!

June 5, 2026
2ஆவது ஆர்ப்பாட்டக்காரருக்கும் ஈரானில் தூக்கு

ஈரான் போர் – அமெரிக்க சபையில் முக்கிய தீர்மானம்

June 5, 2026
முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!

முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!

June 5, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version