சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் வயோதிபர்களின் கொடுப்பனவுகள், நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் என, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை மாதத்துக்குரிய கொடுப்பனவுகளுக்கென 2,684 மில்லியன் ரூபா நிதி சகல மாவட்ட செயலகங்களுக்கும் திறைசேரியால் வழங்கப்பட்டுள்ளது.முதியோர் கொடுப்பனவை தபால் நிலையங்களிலும் விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளை பிரதேச செயலகங்களிலும் நாளை வெள்ளிக்கிழமை முதல் பெற்றுக்கொள்ள முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.






Discussion about this post