Wednesday, March 4, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இடம்பெற்றது என்ன? 2005 முதல் அரசியல் கொலைகளை செய்தவர்கள் யார்? ஆசாத் மௌலானா வெளியிட்ட புதிய தகவல்கள்!

by editor
September 24, 2023
in இலங்கை
0 0
A A
0
செனல் 4 காணொளி – பாதுகாப்பு அமைச்சு வௌியிட்ட முக்கிய அறிக்கை
Share on FacebookShare on Twitter

பொதுத்தேர்தலின் பின்னர் பிள்ளையான் என்னையும் தனது சகோதரரையும் சுரேஸ் சாலேயை சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார். கோட்டாபய ராஜபக்சவும் தற்போதைய அரசாங்கமும் எவ்வாறு பதவிக்கு வந்தனர் என்பதை மறக்க வேண்டாம். தன்னை விடுதலை செய்யாவிட்டால் அதற்காக கடும் விலையை செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்குமாறு பிள்ளையான் எங்களை கேட்டுக்கொண்டார் என ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து சனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய தகவல்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

சனல் 4 ஆவணப்படத்திற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த தகவல்களை வழங்கிய ஹன்சீர் ஆசாத் மெளலானா, மேலும் பல தகவல்களை அடங்கிய புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற அன்று மாலை ஊடகங்கள் மூலம் வெளியான தகவல்களை அடிப்படையாக வைத்தே நான் ஏற்பாடு செய்த சந்திப்பில் கலந்துகொண்டவர்களே உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டனர் என்பதை நான் அறிந்துகொண்டேன்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மூலமும் சிஐடி விசாரணை மூலமும் நான் சந்திக்க வேண்டும் என சுரேஸ் சாலே விரும்பிய நபர் (தாக்குதல் இடம்பெற்ற அன்று காலை) ஜமீல் என்பதை நான் அறிந்துகொண்டேன்-அவர் தாஜ் சமுத்திராவில் தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அவர் அங்கிருந்து வெளியேறி தெகிவளையில் உள்ள சிறிய ஹோட்டலில் தன்னை வெடிக்க வைத்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவிற்கு பிள்ளையானும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரும் ஆதரவளித்தனர்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதும் சுரேஸ் சாலே இலங்கை திரும்பினார் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார், தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டார் இன்றும் அந்த பதவியில் தொடர்கின்றார்.

பிள்ளையானிற்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதால் முன்னாள் சட்டமா அதிபர் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற மறுத்தார், 2020 ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெற்றவேளை பிள்ளையான் தொடர்ந்தும் சிறையிலேயே இருந்தார்.

பொதுத்தேர்தலின் பின்னர் பிள்ளையான் என்னையும் தனது சகோதரரையும் சுரேஸ் சாலேயை சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார், கோட்டாபய ராஜபக்சவும் தற்போதைய அரசாங்கமும் எவ்வாறு பதவிக்கு வந்தனர் என்பதை மறக்க வேண்டாம் தன்னை விடுதலை செய்யாவிட்டால் அதற்காக கடும் விலையை செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்குமாறு பிள்ளையான் எங்களை கேட்டுக்கொண்டார்.

சில நாட்களின் பின்னர் சட்டமா அதிபர் மட்டக்களப்பு நீதிமன்றில் பிள்ளையானிற்கு எதிரான வழக்கை விலக்கிக் கொண்டார்.

Related Posts

இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கை

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

March 4, 2026
இலங்கையில் உள்ள யூதர்களின் இஸ்ரேலியர்களுன் சபாட் இல்லங்களுக்கும் 24 மணி நேர பாதுகாப்பு!
இலங்கை

இலங்கையில் உள்ள யூதர்களின் இஸ்ரேலியர்களுன் சபாட் இல்லங்களுக்கும் 24 மணி நேர பாதுகாப்பு!

March 4, 2026
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்.!
இலங்கை

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்.!

March 4, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

March 4, 2026
இலங்கையில் உள்ள யூதர்களின் இஸ்ரேலியர்களுன் சபாட் இல்லங்களுக்கும் 24 மணி நேர பாதுகாப்பு!

இலங்கையில் உள்ள யூதர்களின் இஸ்ரேலியர்களுன் சபாட் இல்லங்களுக்கும் 24 மணி நேர பாதுகாப்பு!

March 4, 2026
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்.!

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்.!

March 4, 2026
ஈரான் பேச விரும்புகிறது – மிகுந்த தாமதம் என்கிறார் ட்ரம்ப்

ஈரான் பேச விரும்புகிறது – மிகுந்த தாமதம் என்கிறார் ட்ரம்ப்

March 4, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version