20 ரயில் இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்சார ரயில்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், செயலிழந்த சில ரயில் இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் இயந்திரங்கள் எமது நாட்டிற்கு பொருத்தமாக உள்ளதா என்பதை ஆராய தொழில்நுட்பக் குழுவொன்றை இந்தியாவுக்கு அனுப்பவுள்ளதுடன், அதன் பின்னரே குறித்த இயந்திரங்களை இலங்கைக்கு கொண்டு வருவது குறித்து முடிவு எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post