யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சிலரை சந்தேகநபர்களாக,
பெயரிடுமாறு சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நேற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்தனர்.
துண்டிக்கப்பட்ட கை தொடர்பில் மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வைத்தியர் நிபுணர் குழுவின் அறிக்கை நீதிமன்றுக்கு இதுவரையிசமர்பிக்கப்படவில்லை.
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிட்டு,
வழக்கை முன்னோக்கி கொண்டு செல்ல நீதிமன்று அனுமதிக்க வேண்டும் என சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரிக்கை முன்வைத்தனர்.
இதனடிப்படையில், குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதாக தெரிவித்த நீதிபதி, ஏ. ஏ.ஆனந்தராஜா வழக்கை எதிர்வரும் நவம்பர்; ஏழாம் திகதிக்கு தவணையிட்டுள்ளார்.






Discussion about this post