யாழில் சமையல் எரிவாயு சிலிண்டர்களைத் திருடிய இருவர் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் நகரில் கடந்த சில நாட்களாக நூதனமான முறையில் கடைகள் மற்றும் வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திருடப்பட்டு வந்துள்ளன.
இந்நிலையில் இது குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குரு நகர் பகுதியைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து 10 க்கும் மேற்பட்ட சிலிண்டர்களையும் கைப்பற்றியுள்ளர்.
அத்துடன் குறித்த இருவரும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும், போதைப் பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காகவே இவ்வாறு சிலிண்டர்களைத் திருடியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






Discussion about this post