02 முதல் 07 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் பாலியல் காட்சிகள் சமூக ஊடகங்களில் அண்மைக்காலமாக விற்பனை செய்யப்பட்டுவரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக இலங்கையில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்டுள்ள குழுவினால் மேற்கொள்ளப்படும் இந்த மோசடிகளின் மூலம் 1,000 ரூபாவில் இருந்து பல்வேறு விலைகளில் படங்கள் மற்றும் காணொளி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுக்க முயன்றதாகக் கூறப்படும் பண்டாரவளை சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரை பெற்றோர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமும் அண்மையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Discussion about this post