முல்லைத்தீவில் 68 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு 11.00 மணியளவில் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கைவேலி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத மதுபாவனை அதிகரித்து காணப்படும் குறித்த கிராமத்தில் இராணுவத்தினரின் முகாமில் இருந்து அகற்றப்படும் இருப்புகளை விற்பனை செய்து வந்துள்ளார்கள் அதனால் ஏற்பட்ட பண பரிமாற்றம் தொடர்பிலான தகராறால் இவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதையடுத்து, 31 வயதுடைய சந்தேகநபர் தடியால் குடும்பஸ்தர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதன்போது காயமடைந்த குடும்பஸ்தர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலலஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.






Discussion about this post