திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் குவாக குறைந்துள்ளது. இதனால் நேரடி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். விரைவாக சாமி தரிசனம் செய்ய முடிவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் குறைந்துள்ளதால் பக்தர்கள் நேரடி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் பெரும் பிரபலமானது திருப்பதி ஏழுமலையான் கோவில். உலக அளவில் அதிக காணிக்கை பெரும் பணக்கார கோவிலாகவும் உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையானை கட்டணம் செலுத்தி விரைவாகவும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல் இலவச தரிசனத்தில் காத்திருந்தும் தரிசனம் செய்து வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து, வெயில், மழை, குளிர் என எதையும் பொருட்படுத்தாமல் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக இலவச தரிசனத்தில் பல சிறப்பு தரிசனங்களுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான நில்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கு தேவஸ்தான நிர்வாகம் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதேபோல் கட்டண தரிசனங்கள் மற்றும் விஐபி தரிசனங்கள் மூலமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உற்சவ காலங்கள், திருவிழாக் காலங்கள், விடுமுறை நாட்கள் மற்றும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள சமயங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரிசன முறையில் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் பாதிக்கப்படாத வகையில் தரிசன முறையில் மாற்றங்கள் செய்யப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவங்கள் நிறைவடைந்த பிறகு பக்தர்களின் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும் வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இதனால் திங்கள் கிழமை சுமார் 6 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திங்கள் கிழமை மொத்தம் 66,312 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
உண்டியல் வருமானம் 4.70 கோடி ரூபாய் வசூலானதாகவும் 22,002 பக்தர்கள் தலை முடி காணிக்கை செலுத்தியதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது. இந்நிலையில் நேற்று மதியம் முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பக்தர்கள் நேரடி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக செவ்வாய்க்கிழமையான நேற்று வெறும் ஒரு மணி நேரத்திலேயே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. விரைவாக தரிசனம் செய்ய முடிவதாகல் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் இயல்பாகவே உள்ளது. இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 12 ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு அன்றைய தினம் சகஸ்ர தீப அலங்கார சேவையை தவிர அனைத்து கட்டண சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 12 ஆம் தேதி காலை 7 மணிக்கு ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்கவாசல் அருகே ஏழுமலையானின் தீபாவளி ஆஸ்தானம் நடைபெறவுள்ளது. ஆஸ்தானத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கருடாழ்வார் மண்டபத்தில் எழுந்தருளி காட்சி அளிப்பார்.
தீபாவளி பண்டிகை இருந்த போதும் விடுமுறை என்பதால் இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டண தரிசனங்கள் தீபாவளி ஆஸ்தானத்தின் போது ரத்து செய்யப்படுவதால் இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது
Discussion about this post