பலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 4 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குறித்த மண்சரிவில் காணாமல் போயிருந்தனர்.
இதையடுத்து அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமற்போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் அரச செலவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Discussion about this post