Tuesday, May 5, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

அரச நிறுவனங்களின் ஊழல், முறைகேடுகளை ஆராய நேர்மையான அரச அதிகாரி ஒருவரை நியமிக்க நடவடிக்கை.

by editor
November 25, 2023
in இலங்கை
0 0
A A
0
தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு
Share on FacebookShare on Twitter

சில அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு செயற்படவேண்டிய முறை தொடர்பில் வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, பிரதேச செயலக மட்டத்தில் நேர்மையான அதிகாரி ஒருவரை நியமிப்பதன் மூலம் அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.

இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராறச்சி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது குழு முன்னிலையில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அழைக்கப்பட்டிருந்தது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு திறமையான அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய முடியாமல் போயுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

அந்தந்தப் பதவிகளுக்கு போதிய சம்பளம் இல்லாத காரணத்தால் திறமையான அதிகாரிகளை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் சம்பளத்துடன் ஒப்பிட்டு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவில் கேட்டுக்கொண்டனர்.

அதற்கமைய, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சேவைகளை வினைத்திறனுடன் பெற்றுக் கொள்வதற்கு உத்தியோகத்தர்களுக்கு சரியான சம்பள அளவை அமைத்து சம்பளம் வழங்கப்பட வேண்டுமென குழுவின் தலைவர் இதன்போது வலியுறுத்தினார். சம்பள அதிகரிப்பு தொடர்பான குழுவின் பரிந்துரைகளை உரிய பிரிவுகளுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

புதிய சட்டத்தின் மூலம் முன்பை விட பல துறைகளில் விசாரணைகளை நடத்துவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அத்துடன், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை அறிக்கைகளை வழங்கும் அனைத்து நபர்களிடமிருந்தும் அந்த அறிக்கைகளைப் பெறுவதற்கு தமக்கு உரிமை உண்டு என்றும், அது இலத்திரனியல் முறையில் (electronic system) மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். எனினும், அதற்குத் தேவையான இலத்திரனியல் கட்டமைப்பு, தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லாமை காரணமாக அந்தச் செயன்முறையை ஆரம்பிக்க முடியாமல் உள்ளதாக அதிகாரிகள் குழுவிடம் சுட்டிக்காட்டினர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் முறைகேடுகளைக் குறைப்பதற்கு அந்த ஆணைக்குழுவினால் சமூகத்தில் மேற்கொள்ளும் விழிப்புணர்வைத் தொடர்ந்தும் மேற்கொள்வதற்கும், அந்த விழிப்புணர்வை அதிகரிக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, ஜே.சி. அலவதுவல, சமிந்த விஜேசிறி, உதயன கிரிந்திகொட, ஜயந்த வீரசிங்க ஆகியோரும் குழுவின் தலைவரின் அனுமதிக்கமைய, மதுர விதானகே, இசுறு தொடங்கொட ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related Posts

இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கை

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு
இலங்கை

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026
டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்
இலங்கை

டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்

May 1, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Recent News

மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version