நுவரெலிய தபால் நிலைய கட்டிடத்தை முதலீட்டு திட்டத்திற்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா தபால் நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும்.
தற்போதுள்ள தபால் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
1894 ஆம் ஆண்டு, காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட, நுவரெலிய தபால் நிலையம் இலங்கை தபால் திணைக்களத்திற்கு சொந்தமான பழமையான கட்டிடங்களில் ஒன்றாகும்.
விக்டோரியன் மாதிரியில் கட்டப்பட்ட குறித்த தபால் நிலையம் இங்கிலாந்து கட்டிட கலாசார முறையில் கட்டப்பட்டது. மேலும் இது நுவரெலியாவிற்கு அதிகமான சுற்றலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய அடையாளமாகவும் திகழ்கிறது.
இந்த கட்டிடம் சுற்றுலா பயணிகள் மத்தியில் “தி பிங்க் போஸ்ட் ஆபிஸ்” (“The Pink Post Office”) என்று பிரபலமாக உள்ளது.
Discussion about this post