உலகநாயகன் கமல்ஹாசன் அவரது 234வது படத்திற்காக இயக்குனர் மணிரத்னமுடன் இணைந்திருக்கிறார். இந்த படத்தின் பெயர் தக் லைஃப். இந்த படத்தில் நடிகை த்ரிஷா கமல்ஹாசனுடன் ஜோடியாக நடிக்கிறார் என கூறப்பட்டது. தற்போது இந்த படத்தில் உலகழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.உலகநாயகன் கமல்ஹாசன் அவரது 234வது படத்திற்காக இயக்குனர் மணிரத்னமுடன் இணைந்திருக்கிறார். இந்த படத்தின் பெயர் தக் லைஃப். இந்த படத்தில் நடிகை த்ரிஷா கமல்ஹாசனுடன் ஜோடியாக நடிக்கிறார் என கூறப்பட்டது. தற்போது இந்த படத்தில் உலகழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் பல நடிகர்கள் நடிப்பில் பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாவது பாகத்தை ரிலீஸ் செய்த பிறகு உலகநாயகன் கமல்ஹாசனுடன் அவரது 234வது படத்திற்காக இணைந்தார். மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி 34 வருடங்களுக்குப் பிறகு இணைந்திருக்கிறது. கடைசியாக நாயகன் படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே இவர்களின் கூட்டணியில் உருவாகும் இந்த புது படத்திற்கு அதிகளவில் வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
KH 234 என அழைக்கப்பட்ட இந்த படத்திற்கு தக் லைஃப் என பெயரிட்டு இருக்கிறார்கள். பீரியாடி ஜானரில் உருவாகும் இந்த படத்திற்கான ப்ரோமோ வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. மிரட்டலாக இருந்த இந்த ப்ரோமோ படத்திற்கான எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்பை அதிகமாகியது. மிகவும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
தக் லைஃப் படம் சாதாரண பீரியாடிக் படமாக இல்லாமல் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகிறது என்பது வெளியான ப்ரோமோ வீடியோவில் தெரிந்தது. அந்த வகையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் ஜெயம் ரவி, மலையாள நடிகர் துல்கர் சல்மான் உள்ளிட்ட நடிக்கிறார்கள். அந்த வகையில் த்ரிஷா கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார் என எதிர்பார்க்கப்பட்டது. துல்கர் சல்மான் நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்தில் முன்னதாக சிம்புவை அணுகியிருக்கிறார் மணிரத்னம். ஆனால் அது நடக்கவில்லை.
கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணி தற்போது இணைந்திருக்கிறது. இயக்குனர் மணிரத்னத்தின் பிடித்தமான நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராய்தான். கடைசியாக பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாவது பாகத்தில் நந்தினி என்ற அற்புதமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார். அந்த வகையில் மணிரத்னமின் அடுத்த படமான தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக சில தகவல்கள் பரவி வருகிறது.
கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என்றால் த்ரிஷா ஜெயம் ரவி அல்லது துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிப்பாரா ? என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. எனினும் இது குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் க்ராண்ட் பினாலே நிகழ்ச்சியை முடித்த பிறகு இந்த மாத இறுதிக்குள் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் இணைவார் என கூறப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் படத்தின் நடிகர்கள் யார் ? கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய்தான் நடிக்கிறாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தல் ஐஸ்வர்யா ராய் இணைந்தால் இது கமல்ஹாசன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணையும் முதல் கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.












Discussion about this post