ஈரமான செல்போன்களை உலர்த்துவதற்கு வெப்பமான ஹேர்டிரையர் போன்றவற்றை சிலர் பயன்படுத்துகிறார்கள்
22 பிப்ரவரி 2024
நீரில் விழுந்த ஃபோனை அரிசிக்குள் வைத்தால் உலர்ந்து சரியாகிவிடும் என்று மிகவும் பிரபலமான அறிவுரையை தவறு என்று கூறியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
இந்த யோசனை பயன்படாத ஒன்று என்று ஏற்கெனவே நிபுணர்கள் பலர் எச்சரித்து வருகின்றனர்.
இப்போது ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனமும் இதுதொடர்பான ஒரு வழிகாட்டு நெறிமுறைக் கையேட்டை வெளியிட்டிருக்கிறது.
ஈரமான ஃபோனை அரிசிக்குள் வைத்தால் அதில் உள்ள சிறிய துகள்கள் ஃபோனை சேதப்படுத்தும் என்றும் அந்த கையேட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
BBC








Discussion about this post