Sunday, March 22, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home அறிவியல்

இளம் வயதிலேயே முதுகு வலி வருவது ஏன்? மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

by Editor
March 1, 2024
in அறிவியல்
0 0
A A
0
முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் விஜயராகவன் முதுகு வலியோடு வளரும் தலை
Share on FacebookShare on Twitter

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் உடல் சார்ந்து அதிக பிரச்னைகளை கூறுவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஒருகாலத்தில் முதுமையின் ஒரு அங்கமாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த முதுகுவலி, மூட்டு வலியெல்லாம் இப்போது பள்ளி குழந்தைகளுக்கே ஏற்படுவதையும் நாம் பார்க்கிறோம்.

இதற்கு வாழ்க்கை முறை மாற்றம், உணவுமுறை, மரபணு சார்ந்த பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 20 முதல் 30 வயதுள்ள இளைஞர்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் கூட முதுகு வலி ஏற்படுவதற்கான உண்மை காரணங்கள் என்ன? அதை எப்படி வருமுன் காப்பது என்பதை பார்க்கலாம்.
முதுகு வலியோடு வளரும் தலைமுறை
பொதுவாகவே வளரிளம் பருவம் என்பது உடலுறுப்புகள் அனைத்தும் வலுவான அமைப்பை பெறுவதற்கான காலம் என்று கூறப்படுகிறது. அதிலும் பதின்ம வயது காலகட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால், வளரிளம் முன் பருவமான 9 வயதில் இருந்தே பலருக்கும் முதுகு வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதை பார்க்க முடிகிறது.

அதிலும் 20 வயது முதல் 30 வயது வரை இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள், குறிப்பாக அதிகம் உடல்சார் வேலையில் ஈடுபடாமல், மூளைசார் பணியில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு இந்த பிரச்னை அதிகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசுவதற்காக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் விஜயராகவன் அவர்களை அணுகினோம். அவர் கூறும் தகவல்கள் சில உங்களுக்கு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தை அளிக்கலாம்.

முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
தற்போது பலருக்கும் ஏற்படும் முதுகுவலியை “மெக்கானிக்கல் பேக் பெயின்” என்று குறிப்பிடும் அவர், இவர்களில் 80% பேருக்கு பரிசோதனை செய்து பார்த்தால் எந்த பிரச்னையும் இருக்காது என்கிறார்.

இதுகுறித்து விவரிக்கையில், “ முதுகுவலி வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அவர்களது வாழ்க்கை முறை. நீண்ட நேரம் எந்த வித உடல்ரீதியான செயல்பாடுகளும் இல்லாமல், அமர்ந்து கொண்டே இருப்பது. இரண்டாவது, அவர்கள் அமர்ந்திருக்கும் நிலை தவறாக இருக்கலாம்” என்கிறார்.

“இதில் வெகுசிலருக்கே டிஸ்க் சார்ந்த காரணங்கள் இருக்கும். டிஸ்க் என்பது முதுகெலும்புகளுக்கு இடையில் இருக்கும் சவ்வு அமைப்பு. பொதுவாக கீழ் முதுகின் வேலையே மேலே இருக்கும் உடலை தாங்குவதுதான். இதற்கு எலும்பு, தசை, மூட்டு ஆகியவை இணைந்து பணியாற்றும். ஆனால், நீண்ட நேரம் அமர்ந்தே இருக்கும்போது இவை எதுவுமே பணியாற்றாமல், ஒட்டுமொத்த சுமையும் ஜவ்வுகளின் மீது போடப்படுவதால், அது கிழிதல் அல்லது பலவீனமடைதல் போன்ற பிரச்னைகளை சந்திக்கிறது. இதனால் கூட 15% பேருக்கு முதுகுவலி ஏற்படுகிறது.”
எப்படி அமர வேண்டும்?
மருத்துவர் கூற்றுபடி, இயற்கையாகவே உங்களது முதுகுத்தண்டில் கழுத்துப்பகுதி, நடுமுதுகு, கீழ்முதுகு என வளைவுகள் உள்ளன. நீங்கள் சரியாக அமராத போது அவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை தவிர்க்க கீழ் உள்ள வழிமுறைகளை அடிப்படையாக பின்பற்ற வேண்டும்.

லேப்டாப் போன்ற கணினி முன் பணியாற்றுபவர்கள் திரையில் தெரியும் முதல் வரிக்கு நேராக உங்கள் கண்கள் இருக்குமாறு அமர வேண்டும்.
நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது உங்களது கீழ் முதுகு நாற்காலியை தொட்டவாறு அமர வேண்டும். நாற்காலிக்கும், முதுகுக்கும் இடையில் இடைவெளி இருக்க கூடாது.

உங்களது தொடைப்பகுதி தரைக்கு இணையாக இருக்க வேண்டும்.
உங்களது முட்டி பகுதியில் இருந்து கால் வரை இருக்கும் தொலைவே, உங்கள் இருக்கைக்கும் தரைக்கும் இருக்க வேண்டும்.

இருக்கையில் அமரும்போது கைகளை விரித்த நிலையில் அமராமல், உடலோடு ஒட்டியவாறு அமர்ந்திருக்க வேண்டும்.
கீபோர்டு பயன்படுத்தும்போது மணிக்கட்டு, முன் கை உள்ளிட்ட மூன்றும் ஒரே வரிசையில் இருக்க வேண்டும்.
இதேபோல் வாகனம் ஓட்டுபவர்களுக்கும், வெவ்வேறு பணி செய்பவர்களுக்கும் வழிமுறைகள் உள்ளன. அதைப் பின்பற்றினால் மட்டுமே முதுகை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.

மாணவர்களுக்கு அதிகம் முதுகுவலி ஏற்படுவது ஏன்?
தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்கள், இளைஞர்களை தாண்டி பள்ளி முதல் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கும் அதிகம் முதுவலி ஏற்படுவதை பார்க்க முடிகிறது. இதற்கான காரணம் என்ன என்ற கேள்வியை மருத்துவர் விஜயராகவனிடம் முன்வைத்தோம்.

இதற்கு பதிலளித்த அவர், “இதுவும் உடல்சார் செயல்பாடுகளோடு தொடர்புடையது தான். இப்போதெல்லாம் மாணவர்கள் பெரிதும் விளையாடுவதில்லை. அதிகம் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இதனால், அவர்களின் உடல்சார் செயல்பாடு குறைகிறது. எனவே அவர்களது உடல்சார் செயல்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும்” என்கிறார்.

மேலும், “பள்ளி மாணவர்கள் சுமந்து செல்லும் புத்தகப் பையின் எடையும் அவர்களுக்கு முதுவலியை ஏற்படுத்தலாம்” என்கிறார் மருத்துவர் விஜயராகவன். இது மட்டுமில்லாமல் நோயெதிர்ப்பு குறைந்த குழந்தைகளுக்கும் இந்த பிரச்னை வருகிறது.

இந்தியாவில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் எவ்வளவு எடையுள்ள புத்தகப் பையை சுமந்து வர வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன. 2020-ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட அந்த விதியின்படி, ஒரு மாணவர் தன்னுடைய எடையில் 10 சதவீத எடை கொண்ட புத்தகப்பையை மட்டுமே எடுத்து செல்ல வேண்டும்.

இதை குறிப்பிட்டு பேசிய மருத்துவர் புத்தகப் பையை எப்படி அணிந்து செல்ல வேண்டும் என்பதற்கே வழிமுறைகள் உள்ளதாக கூறுகிறார்.

மாணவர்களின் வலியை எப்படி குறைப்பது?
புத்தகப் பையை இரண்டு பக்கமும் மாட்ட வேண்டும்.
பையின் மேல்பகுதி உங்கள் தோள்பட்டைக்கு இணையாக இருக்க வேண்டும். சில பைகளில் இடுப்பில் கட்டிக்கொள்ளுமாறும் வசதி இருக்கும். அதையும் பயன்படுத்தினால் நல்லது.
பைக்கும், முதுகுக்கும் இடையில் இடைவெளி இருக்கக்கூடாது.
அதிக எடையுள்ள புத்தகத்தை முதுகை ஒட்டியவாறும் குறைந்த எடையுள்ள புத்தகங்களை அடுத்தடுத்த வரிசையிலும் அடுக்க வேண்டும்.

முதுகு வலிக்கு பெல்ட் போடுவது உதவுமா?
பெரும்பாலும் முதுகுவலி அல்லது கழுத்தில் வலி ஏற்படும் பலர் பெல்ட் போன்ற ஒன்றை அணிந்திருப்பதை பலரும் பார்த்திருப்போம். அதை கட்டிக்கொண்டு அவர்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பார்கள். அது உண்மையில் பலனளிக்கிறதா? அதன் பணி என்ன? என்பது குறித்து மருத்துவர் விஜயராகவனிடம் கேட்டோம்.

அதற்கு பதிலளித்த அவர், “தசைகள் பலவீனமடைந்து சரியாக வேலை செய்யாத போது பெல்ட்டை நாம் பயன்படுத்துகிறோம். அந்த சமயத்தில் தசை செய்ய வேண்டிய வேலையை பெல்ட் செய்யும். ஆனால், அதை தொடர்ந்து பயன்படுத்த தொடங்கிவிட்டால் தசை மீண்டும் வலுவடையாது. வலி குறைவு ஏற்பட்டவுடன் பெல்ட்டை நீக்கிவிட்டு, மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகள் மற்றும் உடற்பயிற்சிகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே தசை வலுப்பெற்று மீண்டும் அதன் பணியை செய்ய தொடங்கும்” என்கிறார்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
சிலர் சாதாரண முதுகுவலி வந்துவிட்டாலே பயந்து போய் எம்ஆர்ஐ ஸ்கேன் வரை எடுத்துவிடுகிறார்கள். அதை பார்த்து மேலும் பயந்து ஏதாவது ஒரு மருத்துவ மையத்திற்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். இறுதியில் அது பலனளிக்கவில்லை என்றால் ஏமாந்தும் போகிறார்கள்.

ஆனால், அப்படி எல்லா நேரத்திலும் மருத்துவரை அணுக தேவையில்லை என்கிறார் விஜயராகவன். மேலும், தேவையில்லாமல் ஸ்கேன் எடுத்தல், மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்வதும் கூடாது என்கிறார் அவர்.

அப்படியென்றால் எந்த நிலையில் மருத்துவரை அணுக வேண்டும் என்ற கேட்டபோது கீழுள்ள சில அறிகுறிகளை குறிப்பிடுகிறார் மருத்துவர்.

முதுகுவலி தொடங்கி நீண்ட நாட்களாக நீங்காமல் இருந்தால் மருத்துவரை அணுகலாம்.
முதுவலியாக தொடங்கி பின்னர் அந்த வலி காலுக்கும் பரவுகிறது, கால் மரத்து போகிறது என்றால் மருத்துவரை அணுகலாம்.

முதுவலியோடு எடை இழப்பு, பசியின்மை, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம்.
இதைத் தாண்டி தீவிரமான அறிகுறிகளோ அல்லது வித்தியாசமான உணர்வுகளோ ஏற்பட்டாலும் கூட நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

(BBC)

Related Posts

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !
அறிவியல்

இலங்கையில் 18 வயதுக்குட்பட்ட ஒருவர் வாகனம் ஓட்டி, அதன் மூலம் ஒருவருக்கு மரணம் அல்லது காயம் ஏற்படுத்தினால், அது மிகவும் பாரதூரமான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.

February 8, 2026
மாணவர்களின் எதிர்காலமும் செயற்கை நுண்ணறிவும்
அறிவியல்

மாணவர்களின் எதிர்காலமும் செயற்கை நுண்ணறிவும்

January 13, 2026
ஜப்பானியர்கள் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதற்கு இந்த 5 தான் சீக்ரெட்
அறிவியல்

ஜப்பானியர்கள் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதற்கு இந்த 5 தான் சீக்ரெட்

January 13, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026
”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

March 21, 2026

Recent News

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026
”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

March 21, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version