போதை விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான அறிக்கை புகழ் இயக்குநர், தான் பின்னிய வலை படத்தை பிசினஸ் பண்ண முடியாத நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறாராம்.
பைக் நடிகர் இரண்டே நாள்களில் சிகிச்சை முடிந்து கிளம்பினாலும், வேறு ஒரு மருத்துவமனையில் முழுமையான உடல் பரிசோதனை செய்யப்பட்டதாம். பல நாள்களுக்கு முன்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த வாகன விபத்துதான், பைக் நடிகருக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததாம். அப்போதைக்கு அதைச் சட்டை செய்யாமல், சாதாரண சிகிச்சையுடன் ஷூட்டிங்குக்குப் போனாராம் பைக் நடிகர். அதுதான் பெரிய சிக்கலாக மாறி, முக்கிய பாகத்தைப் பாதிக்கவைத்ததாம். ‘பயமில்லை என்றாலும், சில காலம் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை அவசியம்’ எனச் சொல்லியிருக்கிறார்களாம் மருத்துவர்கள். இந்த விஷயம் வெளியே கசியக் கூடாது என்பதற்காகத்தான், அடுத்த பட அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட்டாராம்.
Discussion about this post