‘பிகில்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் இந்திரஜா. அதனைத் தொடர்ந்து சில படங்களிலும் நடித்திருந்தார்.
டெலிவிஷனில் நகைச்சுவை நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர். தனது மிமிக்ரி, உடல் மொழி எனத் தன் திறமையால் மக்களிடையே எளிதில் சென்றடைதார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகத் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்
இவரின் மகள் இந்திரஜா. இவருக்கும் இவரது உறவினரும், இயக்குனருமான கார்த்திக்கிற்கும் இன்று மதுரையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
மதுரையில் ‘தொடர்வோம்’ என்கிற தன்னார்வல தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் கார்த்திக். இவர் இயக்குநராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். ‘பிகில்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் இந்திரஜா. அதனைத் தொடர்ந்து சில படங்களிலும் நடித்திருந்தார்.
பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இவர்களுடைய திருமணம் இன்று மதுரையில் நடைபெற்றிருக்கிறது. சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
வாழ்த்துகள் இந்திரஜா – கார்த்திக்!
Discussion about this post