“நிறைய பேரு, `உங்களோட ட்வீட்ல அரசியல் பேசுறீங்க; ஜல்லிக்கட்டு மாதிரியான போராட்டங்களில் கலந்துக்கிறீங்க. ஆனால், உங்க படங்களில் நீங்க அரசியல் பேசுறது இல்லையே’ன்னு கேட்டிருக்காங்க. அவங்களுக்கு பதில் சொல்ற படம்தான் `ரெபல்.’ இதில் ரொம்ப முக்கியமான அரசியலைப் பேசியிருக்கோம். அதுமட்டுமல்லாம, இந்தப் படத்துலதான் முழு ஆக்ஷன் ஹீரோவாகவும் மாறியிருக்கேன்”
– ஆக்ஷன் ஹீரோவாக மாறினாலும், ஜி.வி.பிரகாஷ் குமாரின் குரல் என்னவோ… அதே மென்மைதான்!
பல படங்களில் ஹீரோவாக நடிக்கறீங்க. இசையமைக்க நேரமிருக்கா..?
“நான் நடிக்கிற படங்களில் மற்ற இசையமைப்பாளர்களோடு தான் வேலை பார்க்கணும்னு ஆசைப்படுறேன். அதை இப்போ கொஞ்சம், கொஞ்சமாகப் பண்ணிட்டும் இருக்கேன். என்னோட `அடியே’ படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன்தான் இசை. அதே மாதிரி `பேச்சிலர்’ படத்தில் நான் மூணு பாட்டு மட்டும்தான் போட்டேன். மத்த பாடல்களை வேற வேற இசையமைப்பாளர்கிட்ட வாங்கினேன். அப்படித்தான் `ரெபல்’ படத்திலேயும் நான் மூணு பாட்டு மட்டும்தான் பண்ணியிருக்கேன். மற்ற வேலைகளை எல்லாம் இசையமைப்பாளர் சித்து குமார் மற்றும் ஆஃப்ரோ (OfRo) தான் பண்ணினாங்க.
Discussion about this post