பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு சீரான பால் விநியோகத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவின் நிர்வாகத்திற்கும் பால் பாக்கெட் விநியோகம் செய்யக்கூடிய வாடகை வாகன ஒப்பந்ததாரர்களுக்கு இடையே பால் விநியோகத்திற்க்கு கொடுக்கப்படும் தொகை கடந்த 15 நாட்களாக குறைத்து வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து விநியோகஸ்தர்கள் இயக்கக்கூடிய லாரிகள் வெளியே செல்லாமல் போராட்டம் நடந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக பொதுமக்களுக்கு பால் விநியோகம் தாமதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆவின் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், சென்னை முழுவதும் பொதுமக்கள் விரும்பி பருகும் ஆவின் பால் விநியோகம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் பெரம்பூர், அண்ணா நகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் மற்றும் அடையார் ஆகிய பகுதிகளில் ஒரு சில மணி நேரம் தாமதமாக விநியோகிக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN
Discussion about this post