தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி(76), சிகிச்சை பலனின்றி இன்று (மார்ச் 28) அதிகாலை காலமானார்.
மதிமுக தொடங்கியதிலிருந்தே ஈரோடு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த கணேசமூர்த்தி, 2016-ல் அந்த கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். 1998-ல் பழநி மக்களவைத் தொகுதி, 2009, 2019-ல் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 28) உடல் நலக்குறைவு காரணமாக கணேசமூர்த்தி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தென்னைக்கு வைக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியானது.
இதனால் ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை காண மதிமுக உட்பட பல்வேறு கட்சியினர் வருகை தந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கணேச மூர்த்தி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 72 மணி நேர தீவிர சிகிச்சையில் இருந்த அவருக்கு, இன்று (மார்ச் 28) அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவரது உயிர் பிரிந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முற்போக்கு சிந்தனைவாதியாகவும், மூத்த அரசியல்வாதியாகவும் இருந்துவந்த கணேசன் மூர்த்தி உயிரிழந்த சம்பவம், மதிமுகவினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post