சித்தார்த், அதிதி ராவ் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: மணிரத்னமிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்து வந்த சித்தார்த், ஷங்கரின் பாய்ஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ், இந்தி, தெலுங்கு என பான் இந்தியா நடிகராக பிஸியாகிவிட்ட சித்தார்த், அதேபோல், அதிதி ராவும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு அடித்து வருகிறார். இருவருமே ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சித்தார்த், அதிதி ராவ் இருவரும் ஒன்றாக வலம் வரும் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வந்தன. சினிமா உட்பட பல நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் ஜோடியாக சென்று வந்தனர். ஒருகட்டத்தில் திருமணம் செய்யாமல் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், சித்தார்த், அதிதி ராவ் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தின் ஸ்ரீரங்கபுரத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில், சித்தார்த்-அதிதி ராவ் திருமணம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இன்று காலை ரகசியமாக நடைபெற்ற இத்திருமண நிகழ்ச்சியில், இருவரது குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டதாக தெரிகிறது. அதேநேரம் இருவரும் சிறப்பு பூஜைக்காக தான் ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயில் சென்றதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post