சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குறிப்பிடத்தக்க மங்களகரமான தேசிய அபிஷேக வைபவம் (ஹிஸ தெல் கம) 2024 ஏப்ரல் 15 ஆம் திகதி காலை 10.17 மணிக்கு நடைபெறவுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி அறிவித்தார். வத்தளை ஹெந்தல புராண ராஜ மகா விகாரையில் நடைபெறவுள்ளது. சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களின் கடைசி மங்களகரமான சடங்கான மரநடுகை ஏப்ரல் 18 ஆம் திகதியன்று சுதேச மருத்துவ அமைச்சினால் ‘மோரிங்கா (முருங்கா) தினமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (PMC) வியாழக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.



Discussion about this post