படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் வந்த செய்திக்கு அஜித்தின் மேலாளர் பதிலளித்துள்ளார்.
துணிவு படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு மகிழ்திருமேனி வந்தார். கவனிக்கத்தக்க க்ரைம் த்ரில்லர் படங்களை இயக்கி வந்த மகிழ்திருமேனியை ரசிகர்கள் தடம் படத்தில்தான் கண்டுகொண்டனர். அதன் பிறகு அவர் இயக்கிய கலகத்தலைவனும் ரசிகர்களை ஏமாற்றவில்லை.
மகிழ்திருமேனி இயக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, பாவனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
அசர்பைஜான் நாட்டில் விடா முயற்சி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிரடி சண்டைக் காட்சிகள், சஸ்பென்ஸ் த்ரில்லராக விடா முயற்சி படம் உருவாகி வருவதாக கூறப்பட்டது.
வெளிநாட்டில் வில்லன் கும்பலிடம் சிக்கிய மனைவி த்ரிஷாவை அஜித் எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் ஒன் லைனாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் அர்ஜுன் என்ற கேரக்டரில் அஜித்தும், கயல் என்ற கேரக்டரில் த்ரிஷாவும் நடிப்பதாக சமீபத்தில் தகவல்கள் தெரிவித்தன.
விடா முயற்சி படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கும் என்று அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் வந்த செய்திக்கு அஜித்தின் மேலாளர் பதிலளித்துள்ளார்.
அந்த பதிலை அதிரடியாக 3 வீடியோக்கள் வெளிட்டு தெரிவித்துள்ளார். இவற்றை அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா மற்றும் பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் ஆகியோர் அந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
‘விடாமுயற்சி’ படத்தின் கார் சேஸிங் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் காட்சிப்படி, அதிவேகமாக செல்லும்போது கார் கவிழும் வகையில் அந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படம் கைவிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post